• Breaking News

    இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி.... மெட்ரோ ரயிலில் இலவச பயணம்

     


    இங்கிலாந்து- இந்தியாக்கு இடையேயான 5 தொடர் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 

    இந்த டி20 போட்டியின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும். இதனை அடுத்து 2ஆவது போட்டி சென்னை மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் ஜனவரி மாதம் 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவித்ததாவது, சென்னையில் நடைபெறும் இங்கிலாந்து இந்திய அணிக்கான டி20 இரண்டாவது போட்டியை காண வரும் ரசிகர்கள் இலவசமாக மெட்ரோ ரயிலில் வீடு திரும்பும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு டி20 இரண்டாவது போட்டிக்கான டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

    No comments