நாளை தொடங்கும் முதல் டி20 போட்டி..... தீவிர பயிற்சியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆட இருக்கிறது. இதில் இரண்டு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முதலில் நடக்க உள்ளது.
அதன்படி நாளை இரவு 7:00 மணிக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டி20 தொடர் கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வைத்து நடக்க இருக்கிறது. இதனால் இரண்டு அணி வீரர்களுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
No comments