• Breaking News

    2026 தேர்தல்..... தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க தவெக தலைவர் விஜய் உத்தரவு

     


    தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதால் தற்போது கட்சியில் புதிய உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் கட்சியை பலப்படுத்துதல் ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

     ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து நடிகர் விஜய் நேர்காணல் நடத்தி மாவட்ட செயலாளர்களின் நியமித்தோடு அவர்களுக்கு வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கினார். அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட இருக்கும் நிலையில் புதிதாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அரசு பேருந்து ஓட்டுநர் தொழிற்சங்கம் அமைய உள்ளது.

    இதற்காக நேற்று புஸ்ஸி ஆனந்த் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முழுவதும் 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி மற்றும் நிர்வாகிகளை நியமிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

    தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி வாரியாக 5 முதல் 7 பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது ஒவ்வொரு பூத்திருக்கும் ஒரு நிர்வாகியை நியமிக்க விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    No comments