செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் மேற்கு தாம்பரம் கடப்பேரி ஜிஎஸ்டி ரோடு சந்தானம் முத்துமாரியம்மன் கோவில் அருகில் 2025 பேருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவியாக சில்வர் குடம் புடவை பேண்ட் சர்ட் போர்வை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாட்டர் பாட்டில் ஆகியவற்றை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டன. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தொடர்ச்சியாக 27 வது ஆண்டாக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் முன்னாள் தாமரம் நகர்மன்ற உறுப்பினருமான தாம்பரம் எம் வேலு ஏற்பாட்டில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன உதவியாக 500 மகளிருக்கு கூட தூய்மை பணியாளர் மற்றும் பார்வையற்றோருக்கு 500 பேருக்கு பேண்ட் சர்ட் புடவை போர்வை ஏழை எளிய தாய்மார்கள் ஆயிரம் பேருக்கு சில்வர் குடம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாட்டர் பாட்டில் 2025 பேருக்கு தினசரி காலனராகியவற்றை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் சார் ராஜேந்திரன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து 2500 நபர்களுக்கு மாலை உணவும் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, தாம்பரம் மத்திய பகுதி கழக செயலாளர் எல்லார் செழியன், கிழக்கு பகுதி கழக செயலாளர் எம்.கூத்தன், மேற்கு பகுதி கழக செயலாளர் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் ஏ.கோபிநாதன், மாவட்ட கழகப் பொருளாளர் பி.கே.பரசுராமன், சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி கழக செயலாளர் இரா.மோகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம்.ஜி.கே.கோபி கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் சி.சாய் கணேஷ், ஸ்டார் பிரபா மற்றும் நிர்வாகிகள் கே.கோபால், எஸ்.ஜேசுராஜ், பி.ராஜா, தீபன், வி.கே.பி.நாராயணன், ஏ.கோபி, பாலாஜி, எஸ்.பி.விஜயபாலன் உட்பட மாவட்டம் பகுதி வட்ட கழக நிர்வாகிகள் உட்பட திரளான கழகத்தினர் கலந்து கொண்டனர்.
0 Comments