கும்மிடிப்பூண்டி அடுத்த குந்தியால்மேடு பகுதியில் 20 பழங்குடியின குடும்பத்தினருக்கு தொகுப்பு வீடுகளை வழங்கி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் திறந்து வைத்தார்


கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் ஊராட்சி குந்தியால்மேடு பகுதியில் பழங்குடியினர் சிறிய குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். ஒவ்வொரு மழை காலத்திலும் இவர்களின் குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்வதும், அதனால் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறி அரசின் தங்கும் மையங்களில் தங்குவதும் வாடிக்கையாக இருந்தது.

இந்த நிலையில் மாநெல்லூர் ஊராட்சி தலைவர் லாரன்ஸ்  அப்பகுதியில் உள்ள  70  பழங்குடியினர் குடும்பத்திற்கு வீடுகள் கட்டித்தர கோரி கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனுக்கு கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசிடம்  பழங்குடியினர்  மக்களுக்கு வீடுகள் கட்டி தர  கோரினார்.

தொடர்ந்து மாநெல்லூர் குந்தியால்மேட்டில் 70பழங்குடியினருக்கு வீடுகள் கட்டும் பணி துவங்கி,. அதில் 20 பழங்குடியினருக்கு வீடுகள் கட்டி, அந்த வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. மாநெல்லூர் ஊராட்சி லாரன்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் ஊராட்சி தலைவர்  லாரன்ஸ் வரவேற்றார்.  இந்த விழாவிற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், துணை தலைவர் மாலதி குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், அமிழ்தமன்னன், திமுக ஒன்றிய செயலாளர் மணிபாலன், திமுக மாவட்ட நிர்வாகி எஸ்.ரமேஷ், பாஸ்கரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

தொடர்ந்து பழங்குடியினருக்கான வீடுகளை திறந்து வைத்து அவர்களுக்கு வீடுகளுக்கான சாவிகளை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் திறந்து வைத்து அவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

பின்னர் நடைபெற்ற விழாவில் பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் மாநெல்லூரில் பழங்குடியினருக்கு தலா 4,37,430ரூபாய் மதிப்பில் என 20 வீடுகள் 87,48,600 ரூபாய் மதிப்பில் வீடுகள் முழுமையாக கட்டி முடித்து பயனாளிகளுக்கு ஒப்படைத்த நிலையில் 45 பயனாளிகளுக்கு தலா  5,07,000 ரூபாய் மதிப்பில் என மொத்தம் 3,15,63,000 ரூபாய் மதிப்பில்  வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து மாநெல்லூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தாருக்கு ஊராட்சி சார்பில் நினைவு பரிசை வழங்கிய எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் அப்பகுதியில் 7லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

Post a Comment

0 Comments