நாமக்கல்: புதுப்பெண் கழுத்தில் 2 தாலி கயிறு..... காவல் நிலையத்தில் கதறிய கணவன்


 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் வசிக்கும் 27 வயது வாலிபருக்கும் கருப்பூரை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான 20 நாட்களில் வாலிபர் புத்தாண்டை கொண்டாட தனது மனைவியை மாமியார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து புத்தாண்டுக்கு புது துணி வேண்டும் என இளம்பெண் கேட்டுள்ளார். மேலும் சேலத்தில் துணி நன்றாக இருக்கும் அங்கேயே போய் துணி எடுத்து விடலாம் என இளம்பெண் கூறியதால் அவரது கணவர் அங்கு அழைத்துச் சென்றார்.அவர்கள்  புது துணிகளை எடுத்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக பழைய பேருந்து நிலையம் வந்தனர்.

அப்போது இளம்பெண் பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் பல்வேறு இடங்களில் தனது மனைவியை தேடி பார்த்தார். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மறுநாள் மாயமான இளம்பெண் காவல் நிலையத்திற்கு வந்தார். இதனால் போலீசார் அந்த பெண்ணின் கணவரையும் பெற்றோரையும் வரவழைத்தனர். திடீரென அந்த பெண் தனது கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழற்றி காவல் நிலைய டேபிளில் வீசி எறிந்தார். அவரது கழுத்தில் மற்றொரு தாலி இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இளம்பெண் திருமணத்திற்கு முன்னரே சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த செந்தில் என்பவரை காதலித்துள்ளார். அவரையே இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த புது மாப்பிள்ளை நிச்சயதார்த்தம் நடந்த போது இதை என்னிடம் சொல்லி இருக்கலாமே? இப்படி என்னை அவமானப்படுத்துகிறாயே. என் சொந்தக்காரர்கள் முகத்தில் எப்படி முழிப்பேன் என கேட்டார். இதனை அடுத்து போலீசார் கேட்டபோது அந்த பெண் தனது காதலனுடன் தான் குடும்பம் நடத்துவேன் என கூறியுள்ளார். அந்த பெண்ணை பெற்றோர் சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது தனது காதலன் கட்டிய தாலி கயிற்றையும் கழட்டி வீசிவிட்டு முதல் கணவரை விவாகரத்து செய்து காதலனை முறைப்படி திருமணம் செய்வேன் என கூறியுள்ளார். மேலும் அந்த பெண் இப்போதைக்கு பெற்றோருடன் செல்வதாக எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments