• Breaking News

    சண்டையில் தோற்ற சேவல் கறி ரூ.1 லட்சத்துக்கு விற்பனை

     


    ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் சேவல் சண்டை நடைபெற்ற நிலையில் பல கோடி ரூபாயை பந்தயமாக கட்டினர். கிட்டத்தட்ட சேவல் பந்தயத்தில் 2000 கோடிக்கு மேல் கைமாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் என்ஆர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சேவல் சண்டையில் பங்கேற்றார். இவருடைய சேவல் பந்தயத்தில் தோற்றுவிட்டது. இது ராஜேந்திரனுக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அதனை கொன்று ஏலம் விட முடிவு செய்தார்.

    இதனை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் பலரும் சேவல் கறியை ஏலத்தில் எடுக்கப் போட்டி போட்டனர். அவர் செய்வளை கொன்ற முழு எண்ணெயில் வறுத்தார். பின்னர் அதனை ஏலத்தில் விட்ட நிலையில் மாகந்தி நவீன் சந்திரபோஸ் என்பவர் அதனை வாங்கினார். இவர் அதனை ரூ.1,11,111-க்கு வாங்கினார். இதனை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். மேலும் உரிமையாளரின் கோபம் லாபமாக மாறியது பேசும் பொருளாக மாறி உள்ளது.

    No comments