தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை- கோவில்பட்டி மெயின் சாலையில் அரச பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் தங்கி படிக்கின்றனர். அரையாண்டு தேர்வு விடுமுறையால் சில மாணவிகள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் விடுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கழுகுமலை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் மாணவியர் விடுதிக்குள் புகுந்தனர்.
அவர்கள் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அந்த மாணவர்கள் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்ததால் அச்சத்தில் மாணவிகள் கூச்சலிட்டனர். இதனால் மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த விவகாரம் குறித்து விடுதி பராமரிப்பாளரான மாடத்தி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த இரண்டு சிறுவர்களையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நெல்லையில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
0 Comments