மேஷம் ராசிபலன்
உங்கள் உணர்வுகள் கட்டுப்பாடில்லாமல் இயங்குகின்றன. மேலும், நீங்கள் இதை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். மனஅழுத்தம் என்பது உங்கள் சக்தியை பெருமளவில் வீணடிக்கும் ஒரு நிலை ஆகும். உங்கள் நிலையினை தாழ்த்தும் செயல்களை வேறுபடுத்தி, அதனை புரிந்துகொள்ளுங்கள். இது கடந்த காலங்களில், நீங்கள் மற்றவர்களுக்கு செய்த தவறுகள், அல்லது ஏமாற்றம் சார்ந்தவையாகக் கூட இருக்கலாம். அத்தகைய சிக்கல்களிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை நீங்கள் கண்டறியுங்கள்.
ரிஷபம் ராசிபலன்
இன்று உங்கள் மனதில் தீர்வு காணப்படாத பல விஷயங்கள், மனத்தெளிவின்மையை ஏற்படுத்தும். உங்கள் மனதில் தெளிவாகத் தெரியும் விஷயங்கள் உங்களுக்கு நல்லவையாகவே இருக்கும். நீங்கள் குழந்தையாக இருந்த போது, உங்களுக்காக யாரால் முடிவெடுக்க முடியும் என்று நீங்கள் விரும்பினீர்களோ, அதே போன்று இப்போதும் உங்களுக்காக யாராவது முடிவெடுக்க மாட்டார்களா என விரும்புகிறீர்கள். ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் கையாள வேண்டியிருப்பதால், நீங்கள் மெதுவாகச் செயல்படுங்கள். பல்வேறு செயல்களை ஒரே நேரத்தில் செய்யும் கலையை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், அது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்க செய்யகூடாது.
மிதுனம் ராசிபலன்
உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நல்ல விஷயங்களுக்கும், நல்ல மனிதர்களுக்கும், நன்றியுடன் இருங்கள். தேவைப்படுபவர்களிடம் பரிவு காட்ட மறக்காதீர்கள். நல்ல அதிர்வுகளுடன் இந்த நாளை ஏன் தொடங்கக்கூடாது? உங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒரு மாலை நேரத்தைத் திட்டமிடலாம். இன்று, அமைதியாக இருப்பது மற்றும் உங்கள் ஆத்ம தோழருடன் நேரத்தைச் செலவிடுவது உங்களுக்கு நிறைய அமைதியைத் தரும். உங்களை விரும்புபவர்களுடன் அன்புடன் இருக்க நீங்கள் விலை உயர்ந்த இடத்திற்குச் செல்ல தேவையில்லை என்பதற்கு இதுவே போதுமான சான்று. உங்களுடன் தொடர்பில் இல்லாத நண்பர் அல்லது நீங்கள் விரும்புபவரைத் தொடர்பு கொண்டு பேசுங்கள். இது நிச்சயமாக அவர்களின் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்கும்.
கடகம் ராசிபலன்
வருத்தம் என்பது உங்களிடம் இருந்து வெளியேற வேண்டிய ஒன்று. உங்கள் அமைதியைக் குலைக்கும் ஒரு கடினமான உறவோடு நீங்கள் சமாதானமாக இருக்க வேண்டும். உங்கள் அறிவையும், திறமையையும் சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில் உங்கள் உள்ளுணர்வைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களது மன அழுத்தத்தைக் குறைக்க இன்று ஒரு வழியைத் தேட வேண்டும். நீங்கள் விரும்பும் ஒன்றைச் செய்யுங்கள் - பயணங்களை மேற்கொள்ளுங்கள், நண்பர்களுடன் பேசுங்கள் அல்லது சோம்பேறித்தனத்தை விட்டு குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுங்கள்.
சிம்மம் ராசிபலன்
சிலரைப் பார்த்தவுடன் கடும் கோபம் கொண்டு அவர்களைத் திட்டி விட நீங்கள் நினைப்பீர்கள். உங்கள் பொறுமையைச் சோதிக்கும் நேரம் இதுவாகும். இந்த நேரத்தில் நீங்கள் அமைதியான மற்றும் விவேகமான மனதுடன் சிந்திப்பது நல்லது. புதிய நண்பர்களுடன் பழக உங்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் புதிய நட்பை உருவாக்க விரும்பினால், உடனுக்குடன் கோபம் கொள்ளும் உங்கள் சுபாவத்தை பின்னுக்குத் தள்ளி விட வேண்டும். உங்களுடன் தொடர்பில் இல்லாத நீங்கள் விரும்பும் நபரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசுங்கள்.
கன்னி ராசிபலன்
நீங்கள் போற்றுதலுக்குரிய ஒருவருடன் சில அர்த்தமுள்ள சம்பாஷணைகளில் ஈடுபடுங்கள். இது இன்றைய விஷயங்களை நிச்சயமாக புதிய பரிமாணத்தில் அணுக உதவும். உங்களது உள்ளார்ந்த அமைதியும், நட்பு பாராட்டுதலும், சில நேர்மையற்ற நபர்களால் அவர்களின் சுயநலத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நீங்கள் வெளிப்படுத்த தயங்குவதால், நீங்கள் ஒரு அப்பாவியாகவும், திறனற்றவராகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளீர்கள். இன்று, உங்கள் உடல்நலம் குறித்து கவனமாக இருங்கள். உடற்பயிற்சி அல்லது உணவுக்கட்டுபாட்டில் கவனமாக இருங்கள். இன்று, உங்கள் உடல் நலனைக் கூர்ந்து கவனித்துக் கொள்ள இது ஒரு நல்ல தருணமாக இருக்கும்.
துலாம் ராசிபலன்
நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க விரைந்து எடுப்பதைத் தவிருங்கள். நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு, உங்களுக்கு முக்கியம் என்று கருத்தும் விஷயங்களைப் பற்றிப் படியுங்கள். உங்கள் வழியில் நிறைய நல்ல விஷயங்கள் வர உள்ளது. நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். உங்கள் புத்திசாலித்தனமும், உண்மைத் தன்மையும் நிச்சயமாக உங்களுக்குப் பெரிய நண்பர்கள் வட்டத்தைப் பெற்றுக் கொடுக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். ஓய்வெடுக்க நேரம் எடுத்து உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம் ராசிபலன்
இந்த நாள், வாழ்நாள் முழுவதும் நீங்கள் போற்றும் சில அன்பான நினைவுகளை உங்களுக்குத் தரும். உங்கள் செலவினங்களை அதிகரித்துக் கொள்ள வேண்டாம். செலவுகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களிடமுள்ள நிதி, உங்களுக்குச் சிறந்த நாட்களைக் கொடுக்கும். ஒரு நெருங்கிய நண்பர் உங்களுடனிருந்து உங்களை உற்சாகப்படுத்துவார். வாழ்க்கையையும் இந்த சிறப்பு நண்பரையும் பாராட்ட இன்று நேரம் ஒதுக்குங்கள்.
தனுசு ராசிபலன்
நீங்கள் விரும்பும் ஒருவர் உங்கள் நம்பிக்கையை உடைத்துவிட்டார். இதை நீங்கள் உணர்கிறீர்கள். நீங்கள் அவரைப் பற்றி மிகச் சிறந்தவர் என்ற கருத்தைக் கொண்டிருந்த போதிலும், நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. நீங்கள் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படவேண்டுமா? என்று சிந்தியுங்கள். சில உறவுகள் உங்களுடன் ஆழமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பாராத ஒருவரிடம் இருந்து பாசம் மற்றும் கவனிப்பு உங்களை வந்தடையும். அதை ஏற்றுக் கொண்டு, அது கொடுக்கும் மகிழ்ச்சிக்கு நன்றியுடன் இருங்கள்.
மகரம் ராசிபலன்
உங்கள் படைப்பு ஆற்றல் பெரியளவில் வெளிப்படும். மேலும், உங்கள் படைப்பாற்றல் இன்று மற்றவர்களை வெகுவாக ஈர்க்கும். நீங்கள் முக்கியமானகாரியங்களைச்செய்வதில் திறமையானவராக இருப்பீர்கள். முழுமையாக உங்கள்திறமையாகச்செயல்படுத்தப்பலவிஷயங்களைக்கூர்ந்து கவனியுங்கள். செய்ததவற்றுக்காகமற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.ஆணவம்காரணமாக மன்னிப்புகேட்காமலிருந்துவிட வேண்டாம். இது நிச்சயமாக மிகவும் முக்கியமானதாக இருக்கும். அன்பான வார்த்தைகளைப் பேசுவது நிச்சயமாக இன்று உங்களுக்கு உதவும்.அன்பாகப்பேசுவது, இந்த நாளில் நன்மைகளை உண்டாக்கும்.
கும்பம் ராசிபலன்
இந்த நாள் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. இதைப் போக்க அனுபவம் வாய்ந்தவர்களுடன் பேசுங்கள் அல்லது நண்பர்கள் மீது நம்பிக்கை வைப்பது உங்கள் கவலையைப் போக்க உதவும். உங்களது அளப்பரிய ஆற்றலை சில நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துங்கள். தியானம், யோகா அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி கூட உங்களுக்கு நல்ல உற்சாகத்தைத் தரும். சுறுசுறுப்பாக இருப்பது, உங்களைப் பற்றி நீங்களே நன்றாக உணர வைக்கும். வீட்டிலும், பணியிடத்திலும் உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்.
மீனம் ராசிபலன்
சமீபத்திய நாட்களில் சோம்பல் உங்களை ஆட்கொண்டுள்ளது, இது உங்கள் இறுதி செயல்திறனை பாதித்து விடும். வேலைகளை தள்ளிப்போடுவதை நிறுத்துங்கள். அற்புதமான வாய்ப்புகள் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. உங்கள் மனதுக்கு உண்மையாக உண்மையாக இருப்பதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம், அது நீண்ட நாட்கள் நீடிக்காது. பணியில் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதுடன், குழுவில் உள்ளவர்களுடன் பேசி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்.
0 Comments