முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த முதலமைச்சர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்..... ஜான் பென்னிகுயிக்கின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி


ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயின் 184 ஆவது பிறந்தநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட மக்கள் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் வைத்து கொண்டாடி வருவது வழக்கம்.இந்நிலையில் இன்று தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுய்க்கின் மணிமண்டபத்தில் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் பொங்கல் வைத்து ஜான் பென்னிகுயிக்கை வழிபட்டு அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி, தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பென்னிகுயிக்கின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி

கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்தநாள் தேனி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான நாள், ஐந்து மாவட்டம் செழிப்பாக இருக்க காரணமாக விளங்கியவர்.முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்துவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார், பேபி அணை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments