மேஷம் ராசிபலன்
நீங்கள் அதிக நேரம் செலவிடக்கூடிய உங்களது அறையைத் தூய்மையாக வைத்திருப்பதற்கும், மறுசீரமைப்பதற்கும் கவனம் செலுத்துங்கள். படைப்பாக்கச் சிந்தனையை வளர்ப்பதற்கு தூய்மை மிக முக்கியமானது. இன்று, நீங்கள் எதிர்பாராத சில செய்திகளைப் பெறலாம். அது உங்களுக்கு கசப்பும், இனிப்பும் நிறைந்ததுமான நினைவுகளைத் தரக்கூடும். உங்களை மோசமான சூழல்களுக்கு தள்ளும் விஷயங்களில், நேர்மறையான விஷயங்களைத் தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு சில எதிர்பாராததும், ஆச்சரியமானதுமான பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறலாம். உங்களுக்கு அமையப்பெற்ற ஆசீர்வாதங்களுக்கு நன்றியுடன் இருங்கள். நல்ல எண்ணங்கள், நல்ல விஷயங்களை செயல்படுத்துகின்றன என்பதை நினைவிற் கொள்ளுங்கள்!
ரிஷபம் ராசிபலன்
நீங்கள் ஏன் சோம்பேறிகளாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வி சில காலமாக உங்கள் மனதை ஆக்கிரமித்துள்ளது. அதை நீங்கள் அகற்ற வேண்டும். இந்த எண்ணத்தால் உங்கள் மனம் பாதித்து இருந்தாலும், அதை உயர்த்துவதற்கான நேரம் இது. நீங்கள் எல்லாவற்றிலிருந்தும் தப்பிக்க விரும்புகிறீர்கள். ஒருவேளை நீங்கள் இவ்வளவு காலமாகத் திட்டமிட்டிருந்த பயணத்திற்கான நேரம் இது. அந்த அழுத்தங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் படைப்புத் திறன்களை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்!
மிதுனம் ராசிபலன்
இந்த நேரத்தில் நீங்கள் மந்தமாக உணர்கிறீர்களா? நீங்கள் இரவு முழுவதும் செலவழித்து அந்த எண்ணங்களால் துயரப்பட்டிருப்பது தெரிகிறது. காதல் என்பது எங்கும் உள்ளது. ஆனால், அதற்காக நீங்கள் அவசரப்பட வேண்டாம். நீங்கள் கோபமானவர் என்று உங்கள் கூட்டாளியை உணர வைக்காதீர்கள். உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுடன்சகஜமாகப்பழகுங்கள். சில தாமதமான வாழ்த்துக்கள், அந்த விலைமதிப்பற்ற கவனம் தேவைப்படும் எவருக்கும், மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் உண்டாக்கும். விட்டுக்கொடுப்பது அவர்களை மகிழ்விக்கும்!
கடகம் ராசிபலன்
நடந்தது நடந்து விட்டது. நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகளைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள். அவற்றிலிருந்து கற்றுக்கொள்வதற்கு தயாராக இருங்கள். உங்கள் அழகும், சாதுர்யமும் நீண்ட காலத்திற்கு உங்களுக்கு கைகொடுக்காது. உங்கள் செயல்பாடுகள் தான் உங்களைப் பற்றி வெளிப்படுத்தும். சிறிதுகாலம் ஆனாலும், உங்களது நிலையான கடின உழைப்பு உங்களுக்கு சிறந்த அங்கீகாரத்தைக் கொடுக்கும்.
சிம்மம் ராசிபலன்
நீண்ட காலமாக, நீங்கள் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என விழைகிறீர்கள். கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு ஆதரவளிப்பதால், தற்போது இது ஒரு சிறந்த தருணம் ஆகும். சரியான காய் நகர்த்தல்களில் ஈடுபடுங்கள். அப்போது, நீங்கள் ஒரு உன்னத நிலையினை அடைவீர்கள். உங்களது அன்பிற்கினிய நண்பர்களும், நலம் விரும்பிகளும் அவர்களின் பரிந்துரைகளை கொடுத்துள்ளனர். அதிலிருந்து முடிந்தவரை பயனடைவது உண்மையிலேயே உங்களிடத்தில் தான் உள்ளது.
கன்னி ராசிபலன்
கடந்த இரண்டு நாட்களில் நிகழ்ந்த விஷயங்கள் சீராக இல்லாமல் இருக்கலாம். உங்களைவிடக்கடினமான காலங்களில்நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.உங்களுக்குக்கிடைத்த நல்ல விஷயங்களை எண்ணி,நேர்மறையாகச்செயல்படுங்கள். விரைவில்உங்களைக்கஷ்டத்தில் ஆழ்த்தும் விஷயங்கள் மாறும். உங்கள் பலம் மற்றும் உங்கள் சமூக திறன்கள் புதிய வாய்ப்புகளை, உங்கள் வாழ்வில் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும். எதிர்பாராத நபர்கள் உண்மையிலேயே ஆச்சரியமான வழிகளில் உங்களுக்கு உதவுவதை நீங்கள் காணலாம்.
துலாம் ராசிபலன்
மக்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்க மாட்டார்கள். உங்கள் அன்புக்குரியவர் உங்களை விட்டுச் சென்றாலும், அதை ஏற்றுக்கொள்ள நேரம் ஒதுக்குங்கள். உங்கள் குடும்பம் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும். அவர்கள் இல்லாதது உங்கள் வாழ்க்கையைப் பாதித்து விடக் கூடாது. நீங்கள் செல்ல வேண்டிய பாதையில் மெதுவாகப் பயணிக்க வேண்டும். புதிய சூழல்களிலிருந்து புதிய யோசனைகளை மனதில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த மாற்றம் மிகவும் அவசியம் என்பதுடன், அதற்கு ஏற்ப செயல்படத் துவங்குங்கள்.
விருச்சிகம் ராசிபலன்
உங்கள் பணப்பையினை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டிய தருணம் இதுவாகும். இல்லையென்றால், நீங்கள் தூங்கும் போது, அதன் கனமானது குறைந்துவிடும். செலவு செய்யும் விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனதின் உள்ளார்ந்த ஆசைகள் காரணமாக பொருட்கள் வாங்குவதைத் தவிருங்கள். இல்லையென்றால், முன்னெப்போதையும் விட இப்போது வருந்துவீர்கள். உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் உங்களை சார்ந்தே இருப்பார்கள். மேலும், நீங்கள் ஒருபோதும் நம்பிக்கையற்றவராக உணரக்கூடாது. ஏனென்றால், கடினமான காலங்கள் தான், எப்போதும் சிறந்த நாட்களுக்கு வழிவகுக்கும். இன்று உங்களது எதிர்மறை அணுகுமுறையை ஒதுக்கி வைத்துவிட்டு, நல்ல விஷயங்களை மட்டும் நம்புங்கள்.
தனுசு ராசிபலன்
ஆக்கப்பூர்வமானவிஷயங்களில் உங்கள்மனதைச்செலுத்துங்கள். சவால்கள் வரும் போது,அதைப்பார்த்துப்பயப்பட வேண்டாம். பல விஷயங்களைச் செய்ய நீங்கள் அவற்றை வரிசைப்படுத்தி,முக்கியமானவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சமீபத்தில் உங்கள் மனதில் ஏதோ இருக்கிறது. நீங்கள் சில புதிய விஷயங்களைச் செய்ய வேண்டும். இதைத் தொடங்க இப்போது சிறந்த நேரமாக இருக்கும். பதற்றம் இன்று அதிகமாக இருக்கும் என்பதால், நீங்கள் மன ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மகரம் ராசிபலன்
படைப்பாற்றல் இன்றுசிறப்பாகச்செயல்படுகிறது. இதை நீங்கள் இன்று அல்லது இந்த வாரத்திற்குள் சிறிது நேரம் செலவிட்டு அதை வெளிப்படுத்த வேண்டும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் தேவைப்படும் இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள். இன்று உங்கள் உடல்நலம் மற்றும் மன நலனில் கவனம் செலுத்துங்கள். இதற்காக மற்றவர்களிடம் உதவி கேட்க வெட்கப்பட வேண்டாம். இந்த நேரத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களுடன் இருப்பார்கள் என்பதால் மகிழ்ச்சியாக இருங்கள்.
கும்பம் ராசிபலன்
நீங்கள் ஒருதலை காதலில்சிக்கியுள்ளீர்கள்? அது உங்களை அதிகளவில் பாதிக்கிறதா? நீங்கள் மீண்டும்அதிலிருந்துமீள வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் மனதிலேயே கேள்வி கேளுங்கள். அந்த குறிப்பிட்ட நபரை வெற்றி கொள்ள நீங்கள் எந்த அளவுக்கு முயல்வீர்கள்? நீங்கள் உங்கள் செயல்களை இருப்பதை விடஅதிகமாகக்காட்டுவதாகத்தோன்றுகிறது, அது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். எந்த வரம்பையும் மீறாதீர்கள். கூர்மையான முனையின் மீது நடந்து செல்லாதீர்கள். உங்கள் ஒவ்வொரு அடியையும் மெதுவாக எடுத்து வைத்து, உங்கள் செயல்களைக் கண்காணிக்கவும்.
மீனம் ராசிபலன்
உங்கள் நரம்புகள் அனைத்தும் இன்று உறுதியாகவும், முறுக்கேறியும் இருக்கின்றன. ஆனால், அமைதியாக இருங்கள். அதிகமாகச் செயல்பட வேண்டாம். முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். சற்று சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி நீங்கள் பயப்படும் போது, அந்த விஷயங்களை நீங்கள் வெறுக்கத் தொடங்குவீர்கள். அந்த பயத்தை உள்ளே வைத்திராமல், வெளியே காட்டி விட்டால் நல்லது. உங்கள் கவலைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது உங்கள் மனதில் உள்ள நிறைய அழுத்தங்களை வெளியேற்றி விடும்.
0 Comments