கும்மிடிப்பூண்டி தாலுகாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 139 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார் டி.ஜெ .கோவிந்தராஜன் எம்.எல்.ஏ


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்காவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார் வட்டாட்சியர் சரவணகுமாரி தனி வட்டாட்சியர் புகழேந்தி மற்றும் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும்  கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்துகொண்டு தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை பற்றி விளக்கி சிறப்புரை ஆற்றினார் இதில் முக்கியமாக விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் 'இன்னுயிர் காப்போம்' திட்டம் பற்றி விளக்கிக் கூறினார்.


பின்னர் இலவச வீட்டு மனை பட்டா,விதவை திருமண நிதி உதவி,இலவச தையல் இயந்திரம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை 139 பயனாளிகளுக்கு வழங்கினார் இதில் பயனாளிகள் பயன்படும் வகையில் உள்ள மொத்த தொகை 1,94,55,758 மதிப்பீட்டில் பணியாளர்களுக்கு வழங்கினார்  முன்னதாக வேளாண்மைத்துறை, தோட்க்கலை துறை, சுகாதாரத்துறை, கூட்டுறவுத்துறை வேளாண்மை துறை  கல்வித்துறை சமூக நலத்துறை. மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை  சார்ந்த கண்காட்சி அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டு, அத்துறைகள் சார்ந்த அரசு அதிகாரிகள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

இதில்  கும்மிடிப்பூண்டி பேரூர் செயலாளர் அறிவழகன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். மெய்யழகன்.  மாவட்ட பொருளாளர் ரமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னாள் மக்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments