மெட்ரோ ரயிலில் சென்ற இதயம்.... 13 கிமீ தூரத்தை 13 நிமிஷத்தில் கடந்து அசத்தல்

 


ஹைதராபாத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட நிலையில் இதயத்தை மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாக டாக்டர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அதாவது ஹைதராபாத்தில் உள்ள எல்பி நகர் பகுதியில் காமினேனி ஹாஸ்பிடல் உள்ளது. இங்கிருந்து லக்டி-கா-புலில் உள்ள க்ளினிகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிடலுக்கு இதயத்தை கொண்டு செல்ல டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக மெட்ரோ ரயிலில் தானமாக பெறப்பட்ட இதயத்தை கொண்டு சென்றனர். கிட்டத்தட்ட 13 கிலோமீட்டர் தூரத்தை 13 நிமிடங்களில் கடந்து அசத்தினர். மேலும் இதயத்தை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு சென்ற மெட்ரோ ரயில்வே நிர்வாகத்திற்கு பாராட்டுகள் என்பது குவிந்து வருகிறது.

Post a Comment

0 Comments