மேஷம் ராசிபலன்
கடந்த காலத்தில் நடந்த வேதனையான விஷயங்களைப் பற்றி இன்று நீங்கள் சிந்திக்க வேண்டாம். இப்படிச் சிந்தித்தால், நீங்கள் மீண்டும் மனதிற்கு வலியை ஏற்படுத்தும் பாதையில் செல்ல விரும்ப மாட்டீர்கள். உங்களுக்கு உள்ள சிறந்த ஞாபக சக்தியே சில நேரங்களில் பிரச்சினையாக மாறி விடலாம். இதனால், உங்களுக்கு அநீதி இழைத்தவர்களை நீங்கள் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது. அமைதியாக இருங்கள், இது உங்களுக்கு இப்போது அவசியம் தேவைப்படுகிறது. உங்கள் இலக்கை அடைய நீங்கள் வலிமை பெற்றவராக இருக்க வேண்டும். இன்று நீங்கள் எதிர்பாராத சிலர் உங்களுக்கு உதவி செய்ய முன் வருவதைக் காணலாம்.
ரிஷபம் ராசிபலன்
சவால்களை ஏற்றுக்கொண்டு, உங்களிடத்திலுள்ள மனோதிடத்தை வரவழையுங்கள். அப்போது, கடினமான பணிகளைச் செய்வதிலிருந்து நீங்கள் விலகமாட்டீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போது, குடும்பத்தினரும், நண்பர்களும் உதவுவார்கள். நீங்கள் உங்களது உள்ளக் கிடக்கைகளை அங்கலாய்கும் போது, அவர்கள் உங்கள் பக்கமாக இருப்பார்கள். ஏதேனும் ஒன்றில் சிக்கிக்கொண்டதாக உணரும் போது, உங்கள் அகம்பாவத்தை விடுத்து, உதவி கேட்க தயாராக இருங்கள்.
மிதுனம் ராசிபலன்
ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்துங்கள். உங்கள் பணியில் நிலையான முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்கள் கடின உழைப்பு விரைவில் பாராட்டப்படும். உங்கள் மேல் அதிக நம்பிக்கை வையுங்கள். உங்கள் திறன்கள் மீது நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால், வாழ்க்கையின் சிக்கல்களைச் சிறப்பாகச் சமாளிக்க முடியும். எந்தவொரு குறிப்பிட்ட விஷயத்திற்காகவும் உங்களைக் கட்டுப்படுத்த வேண்டாம். வெளிக்காட்ட உங்களிடம் நிறையத் திறமைகள் உள்ளன். எனவே புதிய எல்லைகளை நோக்கி பணியாற்றுங்கள்.
கடகம் ராசிபலன்
உங்களுக்காக நிறைய நல்ல விஷயங்கள் காத்திருக்கின்றன. இந்த நல்லவிஷயங்களிலிருந்துநன்மைகளைப் பெற, நீங்கள் உங்கள் முயற்சிகளை இரண்டு மடங்கு செயல்படுத்த வேண்டியிருக்கலாம். உங்கள் மூளையில் எந்த கெட்ட எண்ணங்களுக்கும் இடம்கொடுக்காமல்இருக்க முயற்சி செய்யுங்கள். அந்த மனப்பான்மையை நீங்கள் கைவிட வேண்டும். மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்பது கடினம், ஆனால் நீங்கள் மற்றவரிடம் மன்னிப்பு கேட்பது சிலருக்கு நன்மைகளை உண்டாக்கலாம். உங்கள் ஆணவத்தை விட, நீங்கள் அவர்களை அதிகம் மதிக்கிறீர்கள் என்பதைஅவர்களுக்குப்புரியவையுங்கள்.உங்கள் அன்புக்குரியவர்களின்உணர்ச்சிப்பூர்வமானதேவைகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைப்பதை விட அவர்களுக்கு இது அவசியமாக இருக்கும்.
சிம்மம் ராசிபலன்
நீங்கள் செய்துமுடிக்க வேண்டிய பட்டியலில், நிறைய திட்டங்கள் மற்றும் கருத்துருக்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நேரத்தில் நீங்கள் குழப்பமாகவும், உற்சாகமாகவும் உணர்கிறீர்கள். மனஅழுத்தம் மற்றும் பயம் போன்றவை உங்களுக்கு பிரச்சினைகளை உருவாக்க விடாமல் முயலுங்கள். நீங்கள் ஒரு சிறிய விஷயத்தை செய்தாலும் கூட, நன்றாகச் செய்யுங்கள். இது உங்கள் கவலை மற்றும் மனஅழுத்தத்தை கடந்து செல்ல உதவும். நீங்கள் பங்கேற்க தகுதியற்றவர்களாக இருக்கும் வாய்ப்புகளில், நிபுணர்களின் உதவியைத் கேட்கத் தயங்க வேண்டாம்.
கன்னி ராசிபலன்
உங்கள் கடின உழைப்பு மற்றவர்களுக்கும்தெரியத்தொடங்கியுள்ளது. இது கண்டிப்பாக நல்லபலனைக்கொடுக்கும். வாழ்க்கை நீங்கள் நினைத்ததைவிடச்சிறந்தது என்று நீங்கள் உணர்கிறீர்கள். நீங்களே மிகவும் கடினமாக நபராக இருக்காதீர்கள். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். பல விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுகின்றன. இன்று, நீங்கள் சிறந்த புத்திசாலி போன்று செயல்படுவீர்கள். அதைஉங்களுக்குச்சாதகமாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு விருந்து தயாராக உள்ளது, எனவே அதற்குச் செல்லுங்கள்.
துலாம் ராசிபலன்
எல்லா தவறுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இன்றைய நாளை உங்களது குடும்பத்திற்காக அர்ப்பணியுங்கள். உங்களது குடும்பதிற்காக செலவிடும் நேரத்தின் அளவை குறைக்கக்கூடிய விஷயங்களை, அனுமதிக்கும் மனநிலையில் இல்லாதிருங்கள். வரவிருக்கும் வாரத்தில் உங்களை சரியான பாதையில் நிலைநிறுத்தக்கூடிய விஷயங்களைத் திட்டமிட்டு ஒழுங்கமைக்க, இன்று சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்தவர்களைப் பாராட்டுங்கள். சிந்தனைமிக்க செய்கைகளால் அவர்களை ஆச்சரியப்படுத்துவது, உங்களது அன்பினை அவர்களுக்குக் காண்பிப்பதற்கான ஒரு நல்வழியாகும்.
விருச்சிகம் ராசிபலன்
உங்கள் வார்த்தைகளால் இன்று உங்களுக்கு நல்லது நடக்கும். கனிவான பேச்சுகள் உங்களது காயங்களை ஆற்றுவதுடன், உங்களுக்கு ஆறுதலையும் தரும். முந்தைய ஆண்டுகளின் காயங்கள் மறைந்து விடும். மக்கள் இன்று உங்களை புதிய மரியாதையுடன் பார்ப்பார்கள், ரகசியங்களை பாதுகாப்பதில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள், உங்கள் புதிய நண்பர்களும் இது போன்று இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். இந்த எதிர்பார்ப்பால் உங்களுக்கு வருத்தமே ஏற்படும். ஒருவேளை நபர்களோ இடங்களோ உங்களுக்கு ஒரு மோசமான நேரத்தை நினைவூட்டலாம், மோசமான நினைவுகள் உங்களை புதிய நிலைக்கு கொண்டு செல்லும்.
தனுசு ராசிபலன்
உங்கள் தகவல்தொடர்பு தோல்வியுற்றதாகத் தெரிகிறது, அது உங்களை ஒரு நல்ல நபராக மாற்றவில்லை. உங்கள் உரையாடல் திறன்களை மேம்படுத்திக் கொள்வது முயற்சிகள் அடுத்த சில நாட்களில் நிச்சயமாக உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ரிஸ்க் எடுப்பது உங்களுக்கு புதிதான ஒன்று அல்ல. இன்று எதிலாவது முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்துப் பாருங்கள், நீங்கள் எடுக்கும் தவறான முடிவு நீங்கள் கற்பனை செய்வது கூட பார்க்க முடியாத பெரிய செலவை உண்டாக்கி விடும்.
மகரம் ராசிபலன்
இன்று, உங்களது சமூக நிலைப்பாடு துடிப்பானதாகவும், உந்துதலாகவும் இருக்கும். எனவே, களிகூருங்கள். மேலும், உங்களது முகத்தை சிறப்பாக வெளிக்காட்டிக் கொள்ளுங்கள்! நீங்கள் காற்றிலே பறந்து செல்லும் பட்டாம்பூச்சி போன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இது உங்களுக்கு நடக்காது, செயலாற்றாது என்று தவறாக இருந்துவிடாதீர்கள். இதனால், நீங்கள் சில சவால்களையும் எதிர்கொள்வீர்கள். விடாமுயற்சியைக் கொண்டிருங்கள் அப்போது, வெற்றிக்கோப்பை மிக விரைவில் உங்களை அடையும். ஆகவே, கடினமாக உழையுங்கள்!
கும்பம் ராசிபலன்
சமீப காலமாக நீங்கள் மனச்சோர்வடைந்து உள்ளீர்கள். நீங்கள் முன்பு போல் சுறுசுறுப்பாக இல்லை என உணர்கிறீர்கள். உங்களைப் பழைய படி மாற்றிக் கொள்ளச் சிறிது நேரம் தேவைப்படும். அது குறித்து நீங்கள் இன்று முடிவு செய்ய வேண்டும். முக்கிய விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். மெதுவாக, ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு செயல்படுத்துங்கள். பல விஷயங்கள் உங்களைப் பாதிக்கும். உங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும். உங்களை மீண்டும் பழைய பாதைக்குக் கொண்டு வர உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியைப் பெறுங்கள்.
மீனம் ராசிபலன்
மோசமான அணுகுமுறையை விட்டுவிட்டு, உங்கள் பின்னால் இருப்பவர்கள் யாரும் உங்களை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களை வீழ்த்த யாரோ ஒருவர் வெளியே காத்துக் கொண்டிருக்கிறார். மற்றவர்களை மகிழ்விக்கும் உங்கள் தன்மை உங்களைச் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. இன்று நீங்கள், உங்கள் ஆற்றலைப் பயன்படுத்தும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மறந்து விட்டு, நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். புத்திசாலித்தனமாகப் பேசுங்கள், எந்த முடிவு எடுக்காமல் செயல்படத் தொடங்குங்கள், உங்கள் திருமணத்திற்குப் பிறகு ஒரு பிரகாசமான திருப்பம் கிடைக்கும் என்று தெரிகிறது.
0 Comments