தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகிவிட்டது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ரு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மத்திய மற்றும் மாநில அரசுகள் முயற்சி செய்து வரும் நிலையிலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்கிறார்கள்.
சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த இலங்கை அதிபர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார். ஆனாலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகிவிட்டது. அந்த வகையில் தற்போது நெடுந்தீவு அருகே காரைக்காலை சேர்ந்த தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்து விட்டதாக குற்றம் சாட்டி 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments