கன்னியாகுமரி: 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.... போலீசார் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொலையா வட்டம் கண்டககுழிவிளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதில் பத்தாம் வகுப்பு படித்து வந்த ஷாஜினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கடந்த 18-ம் தேதி பள்ளிக்கூடத்தில் நடந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டார்.
பின்னர் வகுப்பு முடிந்து வீட்டிற்கு திரும்பிய திரும்பி தன் தம்பியுடன் சேர்ந்து மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து சிறுமியின் தம்பி சாப்பிடுவதற்காக கீழே சென்றார். இதைத்தொடர்ந்து சசிகுமார் தன் மகளை பார்க்க மாடிக்கு சென்றார். அப்போது அவருடைய மகள் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்தவுடன் சசிகுமார் அதிர்ச்சியில் உறைந்து விட்டார். உடனடியாக சசிகுமார் தன் மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.
இது தொடர்பாக கருங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் கடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
No comments