வண்டலூரில் எம்ஜிஆர் 108வது பிறந்த நாள் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது


செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வண்டலூர் பேருந்து நிலைய அருகே முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 108 வது பிறந்தநாள் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மேற்கு மாவட்ட காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.கஜா என்கிற கஜேந்திரன் தலைமையில் ஏற்பாட்டில் 108வது எம்.ஜி.ஆரின் அவர்களின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 வரவேற்புரை காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் இ.சம்பத்குமார்,    காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.குணசேகரன், மறைமலை நகர் கழக செயலாளர் டி.எஸ்.ரவிக்குமார்,  செங்கல்பட்டு நகர கழக செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார், மறைமலைநகர் நகரக் கழக செயலாளர் எம்.ஜி.கே.கோபி கண்ணன், டி.ரவி மாவட்ட விவசாய அணி செயலாளர் கண்ணப்பன், மாவட்ட விவசாய அணி அவைத்தலைவர் முன்னிலை நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், தலைமை கழக பேச்சாளர் பசி.சத்தியா, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகத் துணைச் செயலாளர் ப.தன்சிங், பெரும்பாக்கம் இ.ராஜசேகர், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.சேகர், எஸ்.பார்த்திபன், 5வது வார்டு உறுப்பினர் எம்.மாவீரன், குலசேகரன், டி.செல்வாசேகர்,  கார்த்திகேயன் எஸ்.ஸ்ரீ.சாய் விக்னேஷ், வி.எஸ்.சதீஷ், மண்ணிவாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி புருஷோத்தமன், முன்னாள்,  மண்ணிவாக்கம் வார்டு உறுப்பினர் நாகராஜன், பொன் தர்மராஜ் அதனைத் தொடர்ந்து 300க்கும் மேற்பட்டோர் மகளிர்களுக்கு புடவை வழங்கினார்கள் கட்சி நிர்வாகிகள் ஊராட்சி செயலாளர்கள் கிளை செயலாளர்கள் மகளிர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இறுதியில் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய அண்ணா தொழில் சங்க செயலாளர் எஸ்.செங்குட்டுவன்  நன்றி உரையாற்றினார்.

Post a Comment

0 Comments