தாம்பரத்தில் எம்ஜிஆர் 108வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக பொருளாளர் தாம்பரம் கூட்டுறவு வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் பி.கே.பரசுராமன் தலைமையில் நடைபெற்றது.
பகுதி கழகச் செயலாளர் எல்.ஆர்.செழியன், எம்.கூத்தன், ஏ.கோபிநாதன் நிர்வாகிகள் டி.ஆர்.கஜா, ஏ.கோபிநாத், தனலட்சுமி, மார்க்கெட் என்.காசி, எம்.வேலு, எஸ்.மாரி, மார்க்கெட் ஜி.பாபு ஆகியோர் வரவேற்பு உரையாற்றினார் வட்டக் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் எஸ்.ஜேசுராஜ், நாராயணசாமி, பாலகணேஷ், அக்பர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இக்கூட்டத்தில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் எம்.சி.கிருஷ்ணன், கழக இலக்கிய அணி துணைச் செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராம் மோகன், சீனு பாபு, மதுரபாக்கம் எம்பி.மனோகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் காசிராஜன் பாண்டியன், சபரிஸ் மணிகண்டன், 50வது வட்டக் கழக நிர்வாகிகள் மாரி, ஜெகதீஸ்வரன், அகரம் ஜானகிராமன், பொன்னுசாமி, ஜீவன் ஜீவா, முடிச்சூர் நிர்வாகி ஸ்ரீ பாஸ்கர் உட்பட மாவட்ட பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.இந்த கூட்டம் முடிவில் 50வது வட்டக் கழக செயலாளர் பார்த்தசாரதி, வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் தாரா மேகம் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்.
No comments