100 நாள் வேலை சம்பளத்தை உடனே வழங்க கோரி கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் 100 நாள் வேலை எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்காமல் மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது. இதனை கண்டித்தும் மத்திய அரசு 100 நாள் வேலைக்கான நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும், 100 நாள் வேலையை உடனே தொடங்க வேண்டும், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு இறுதி தொகை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில் 100 க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்துக் கொண்டனர். இதே போன்று நாகை மாவட்டத்தில் திருமருகல், நாகை, கீழையூர், தலைஞாயிறு, வேதாரண்யம் ஒன்றிய அலுவலங்கள் முன்பாகவும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
No comments