தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்று தகவலை தெரிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் 10,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் நிலையில் டிஆர்பி மூலமாக 6000 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிந்து நியமன தேதியை முடிவு செய்து பணி உத்தரவை வழங்கும் நிலையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் வழக்கு தொடர்ந்து விட்டனர்.
இந்த வழக்கு வருகிற 21ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதன் பிறகு படிப்படியாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தற்போது தற்காலிக ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது என்றும் கூறினார்.
0 Comments