தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் குணராமநல்லூர் பஞ்சாயத்தில் உள்ள கடப்போக்காத்தி கிராமத்தில் உள்ள குளத்தின் நீர் பாதையில் அமைந்துள்ள சாலையின் தரைபாலத்தில் தடுப்பு கம்பிகள் இல்லாமல் அபாயகரமான நிலையில் உள்ளதால் இரவு நேரங்களில் வெளியூர் நபர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை பாலத்தின் தடுப்பு கம்பிகள் சரி செய்யப்படவில்லை. தயவுசெய்து பாலத்தின் தடுப்பு கம்பிகள் அமைத்து விபத்து ஏற்படும் அபாயத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்தமிழர்கட்சி தென்காசி மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments