சென்னையில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் அந்த பகுதியில் உள்ள ஒரு இளம் பெண்ணின் வீட்டில் டியூஷன் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி சிறுவன் வீட்டில் இருந்து டியூஷன் சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை.
இதன் காரணமாக எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் அந்த சிறுவனின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வந்த நிலையில், அவர்கள் பாண்டிச்சேரியில் இருப்பது தெரியவந்தது.
அதாவது அந்த சிறுவன் தனக்கு டியூஷன் சொல்லி கொடுத்த பெண்ணின் தங்கையான 22 வயது இளம்பெண்ணுடன் பாண்டிச்சேரிக்கு சென்றுள்ளார். இவர்களுடன் ராகுல் என்ற 19 வயது வாலிபரும் சென்றுள்ளார். இவர்கள் அனைவரையும் காவல்துறையினர் பாண்டிச்சேரியில் பிடித்த நிலையில் இளம்பெண் மற்றும் ராகுல் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.
பின்னர் சிறுவனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த இளம் பெண்ணை காதலித்ததாக கூறியுள்ளார். அவர்களுடைய காதலுக்கு ராகுல் உதவி செய்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments