மேஷம் ராசிபலன்
நாளும் வளருங்கள். ஆனால், உங்களது உறவினர்களின் வளர்ப்பில் வளரும் நபராக மட்டும் இருக்க வேண்டாம். உங்களது குழந்தைத்தனமான செயல்களை சிலர் சரியான நிலையில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் நல்ல நோக்கங்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மனதளவில் காயப்பட விரும்பவில்லை யெனில், உங்களது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படையாக வெளிப்படுத்தாதீர்கள். உங்களது உடல்நிலை சரியாக இல்லை. எனவே, அதுகுறித்து இன்று நீங்கள் கவனம் செலுத்த வேண்டியதுள்ளது.
ரிஷபம் ராசிபலன்
தேவையற்ற கவலைகளிலிருந்து உங்கள் மனதை விடுவித்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றே கவனச்சிதறலை உருவாக்கவும். இந்த நாளில் முன்னோக்கிச் செல்ல தேவையான செயல்களைச் செய்யுங்கள். அற்ப விஷயங்களில் நீங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது. மக்கள் என்ன நினைப்பார்கள் என்பது உங்கள் கவலையாக இருக்கக்கூடாது. உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் விடாமுயற்சியுடன் இருந்தால், சில விரைவான வெகுமதிகள் உங்களைத் தேடி வரும்!
மிதுனம் ராசிபலன்
உங்கள் அன்புக்குரியவர் எல்லை மீறி நடந்து கொண்டாலும், நீங்கள் அவரை காயப்படுத்த வேண்டாம். சந்தேகத்தின் பலனை அவர்களுக்குச் சாதமாக நீங்கள் வழங்க விரும்பினாலும், அதைக் கொடுக்க முடியாது. இதற்கு சில தடைகளை நீங்கள் உடைக்க வேண்டியிருக்கும். அந்நியர் ஒருவர் உங்களுக்குக் கருணை காட்டுவார், இது உங்கள் வாழ்க்கையில் மீண்டும் நம்பிக்கையை உருவாக்க போதுமானதாக இருக்கும். எனவே, தொடர்ந்து முன்னேறுங்கள்!
கடகம் ராசிபலன்
இன்று நீங்கள் பேசும் வார்த்தைகளில் கனிவாகப் பேசுங்கள். உங்கள் கனிவான வார்த்தைகள் நீங்கள் விரும்பும் நபருக்கு ஆறுதலைத் தரும். இதனால் கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்கள் மறைந்து விடும். மேலும், மக்கள் உங்களை புதிய மரியாதையுடன் பார்ப்பார்கள். நீங்கள் ரகசியங்களைப் பாதுகாப்பதில் வல்லவர். ஆனால், அதே போன்று உங்களைச் சுற்றியுள்ளவர்களும் இருக்க வேண்டும் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி நீங்கள் நினைத்தால், அதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
சிம்மம் ராசிபலன்
நீங்கள் ஒரு ஆகச்சிறந்த படைப்பாக்க வாதி. எனவே, நீங்கள் அந்த திறமைகளை உலகிற்குக் காட்ட வேண்டிய நேரம் இது. எனவே, அவற்றைச் சரி செய்து கொள்ளுங்கள். அனைவரையும் நேசிக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அப்படி நேசிக்க முடிந்தால், அது நல்லது. உங்கள் 'அற்புதமான' யோசனையில் சந்தேகம் வரும் போது, உங்கள் முன்னேற்றத்தை மனதில் கொண்டு செயல்படுங்கள். வெறுப்பு உங்கள் கோபத்தை அதிகரித்து விடலாம். ஆனாலும், மற்றவர்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும். அவர்களின் யோசனைகளில் உங்களுக்கு உதவக்கூடிய சில எண்ணங்களைப் பெறக்கூடும்.
கன்னி ராசிபலன்
தவறான தகவலை விட ஆபத்தானது எதுவுமில்லை. ஒரு புதிய தகவல் உங்களுக்கு வரும் போது, இது நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து வந்ததா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். அறிவுசார் உரையாடல்கள் தென்படுகின்றன. அவை நிறைய விஷயங்களைப் பற்றிய உங்களது அறிவை அதிகரிக்கும். வீட்டில் நடக்கவுள்ள ஒரு சூழ்நிலை நீங்களே பார்த்திராத உங்களுடைய வேறுபட்ட சாயலைக் காட்டிவிடும். நீங்கள் எவ்வளவு வலிமையானவர் என நினைத்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
துலாம் ராசிபலன்
உங்களுக்கு இருக்கும்பிரச்சினைகளிலிருந்துவெளியேற, சிறந்தஇராஜதந்திரத்தைப்பயன்படுத்துவது மிகவும் முக்கியம். நீங்கள் நினைப்பதை விட, நீங்கள் கடினமானவராக இருக்கிறீர்கள். நீங்கள் அமைதியாக இருப்பதுடன், விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் செய்ததவற்றுக்குமன்னிப்பு கேட்பது, கடந்த காலத்தின் வடுக்களைக் குணப்படுத்த உதவும். இதனால் பழைய பிரச்சினைகளை விட்டு விடுங்கள், எல்லா பிரச்சினைக்கும் மதிப்பளிக்க வேண்டியதில்லை. புதிய ஒன்றை ஆராய ஒரு வாய்ப்பு கிடைத்தால், உங்கள் அறிவையும், திறமையையும் வளர்த்துக்கொள்ள அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குங்கள். மேலும்ஓய்வுஎடுத்துக் கொள்ள முன்னுரிமை கொடுங்கள்.
விருச்சிகம் ராசிபலன்
ஆற்றலின் நேர்மறையான வெளிப்பாடுகள், இந்த நாளில் உங்களை வாய்ப்பை உருவாக்கும். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இன்றுஉங்களைப்பிடித்துள்ளசோம்பேறித்தனத்தைத்தூக்கி எறியுங்கள். மன அழுத்தம் என்பது உங்கள் ஆற்றலை அதிகம் பாதிக்கும் ஒன்றாக இருக்கும். உங்களைத் தடுத்து நிறுத்தும் விஷயங்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அது உங்கள் கடந்த கால தவறுகள் அல்லது தோல்வி பயமாகக் கூட இருக்கலாம். இத்தகைய பிடிப்பு களிலிருந்துவிடுபடக்கற்றுக்கொள்ளுங்கள். இன்று, உங்கள் வாழ்க்கையில் உங்களுடன்இருப்பவர்களைப்பாராட்டச்சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்கள் அன்பையும், பாராட்டையும் அவர்களுக்குக் காட்டுங்கள்.
தனுசு ராசிபலன்
உங்களுக்கு சவுகரியமாக இருக்கும் மண்டலத்தின் எல்லையிலிருந்து வெளியேறுவதற்கு சற்று குழப்பமாக இருக்கும் போது, இந்த மாற்றம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உங்களுக்கு பயனளிக்கும். சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், இதுபோன்ற மாற்றங்கள் உங்களுக்கு உதவும் என்று நம்பிக்கையுடன் இருங்கள். நீங்கள் மற்றவர்கள் மீது கடுகடுக்கப் போகிறீர்கள் என்று நீங்கள் உணர்கிறீர்கள். இது உங்களது அன்புக்குரியவர்களிடமிருந்து கூட, உங்களைத் துன்புறுத்துகிறது. உங்கள் பயத்தை ஓரம்கட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதை எதிர்கொள்வதை பற்றி கவலைப்பட வேண்டாம். மேலும், இன்று உங்கள் மென்மையான குணங்களை அவர்களுக்கு வெளிப்படுத்த பயப்பட வேண்டாம்.
மகரம் ராசிபலன்
உங்கள் வணிக அல்லது தொழில் விவகாரங்களை முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டில் கொண்டு செல்ல வேண்டிய நேரம் இது. உங்கள் அறிவை மெருகூட்டவும், உடைந்த இணைப்புகளை இணைக்கவும், நீங்கள் முன்னேறும் போது தவறான அடி எடுத்து வைத்து இருப்பதை நிறுத்த இது உதவும். ஆராய்ந்து, உங்கள் மனதைத் திறந்து, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். விரைவில் நீங்கள் சரியான பாதையில் செல்லத் தொடங்குவீர்கள்.
கும்பம் ராசிபலன்
கோபம் உங்களை மீறிச்செல்வதை அனுமதிக்காதீர்கள். எப்போதெல்லாம் உங்களது மனநிலையை இழக்கிறீர்களோ, அப்போது, நீங்கள் உங்களது உணர்ச்சிகளின் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். இன்று, நீங்கள் அதை செயல்பாட்டிற்கு கொண்டு வாருங்கள். மற்றவர்கள் உங்களைத் வெறுப்பேற்றும் போது கூட, இன்று உங்களது சமநிலையை இழக்காதீர்கள். நீங்கள் விரும்புகின்ற கவனத்தைப் ஈர்க்க வேண்டி, தன்னிலை தாழ்ந்து நிற்க வேண்டாம். அதற்கு பதிலாக, உங்களுக்கு பயனளிக்கும் விஷயங்களில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். நீங்கள் ஜொலிக்கக்கூடிய துறைகளில் உங்கள் மனதை செலுத்துங்கள்.
மீனம் ராசிபலன்
பல விஷயங்கள் உங்களைப் பாதிக்கலாம். உங்கள் உணர்ச்சிகள் எல்லா இடங்களிலும் வெளிப்படலாம். மேலும், வாழ்க்கையைச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இதுவாகும். நீங்கள் தேர்வு செய்தவை மற்றும் முடிவெடுத்தவற்றை வெளிக்காட்டச் சிறிதளவில் நேரத்தைச் செலவிடுங்கள். இதன் மூலம், உங்களுக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்த கேள்விகளில் சிலவற்றுக்குப் பதில் கிடைக்கச் பெறுவதுடன், உங்களுக்குத் தேவையான தெளிவுகளைத் தரும். உங்கள் மனதைக் கவலையடையச் செய்யும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை பெறவும். உங்களை விரும்புவாரால் மட்டுமே உங்களுக்காகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியும்.
0 Comments