மேஷம் ராசிபலன்
வாழ்க்கையில் உங்களுக்குப் புரியாத சில சம்பவங்கள் உள்ளன. சிலர் உங்களிடம் ஏன் இரக்கமற்ற முறையில் நடந்த கொள்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. நீங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் செல்ல வேண்டும் அல்லது உங்கள் சொந்த அறிவுத் திறனை அதிகரித்துக் கொள்ள இதைக் கவனிக்க வேண்டும். சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உங்களைச் சுற்றி இருக்கலாம். இது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். இது முதலில் ஒரு சுமையாகத் தோன்றினாலும், நீங்கள் அதை நேசிப்பீர்கள்.
ரிஷபம் ராசிபலன்
நீங்கள் சந்தித்த பெருபாலான மனிதர்கள் பாசாங்குகாரர்களாக இருப்பதாக நினைத்து, நீங்கள் மிகவும் வருத்தப்படுகிறீர்கள். இந்த உலகில் நேர்மையான மனிதர்கள் யாருமே இல்லையா? இவ்வாறான மக்கள் மீதான உங்கள் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு உதவக்கூடிய ஒரு நபர், உங்கள் வாழ்க்கையில் தற்போது இருக்கிறார். நீங்கள் ஒரு பதட்டமான மற்றும் நரம்புகளே செயலிழந்து போகும் ஒருநிலையின் விளிம்பில் இருக்கிறீர்கள். உங்களது உத்வேகமான ஒரு சிறிய முயற்சி போதும், நீங்கள் சிகரத்தை தாண்டிவிடலாம். உங்களது சிறந்த நண்பரைக் கூப்பிடுங்கள். ஒரு சிறிய உணர்வின் வெளிப்பாடு, உண்மையில் மனஅழுத்தத்தை வெகுவாக குறைக்கும்.
மிதுனம் ராசிபலன்
உண்மையில் இன்று நீங்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளீர்கள், இதில் கவனம் செலுத்தாமல், அமைதியாக விஷயங்களைச் செய்யத் தேர்வு செய்யுங்கள். இறுதி முடிவு உங்களைப் பற்றிப் பேசட்டும். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறைக்க வேண்டாம். இதனால் உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்ளலாம். உங்களால் பயன்பெற சில நபர்கள் வெளியே காத்திருக்கின்றனர். எப்போதும் அந்த நபர்களைத் தேடுங்கள்.
கடகம் ராசிபலன்
இன்று மென்மையான மனதுடன் நடந்து கொள்வதுடன் மகிழ்ச்சியாக இருப்பதைத் தேர்வு செய்யுங்கள். எதிர்மறை எண்ணங்கள் இன்று உங்கள் மனதையும் இதயத்தையும் கடுமையாகப் பாதித்து விடக்கூடாது. இன்று மிகவும் பயனுள்ள விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இதனால், நீங்கள் செய்ய நிறைய விஷயங்கள் கிடைத்திருக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் இயல்பான திறன்கள் மற்றும் திறமைகளைப் பற்றிப் பாராட்டு கிடைக்கச் செய்யும். புன்னகையுடன், நிதானமாக, புதிய யோசனைகளை மனதுடன் ஒன்றிணைக்க கற்றுக் கொள்ளுங்கள்.
சிம்மம் ராசிபலன்
உங்களின் செயலற்ற மனமானது, பின்னாளில் உங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பயனுள்ள செயல்கள் மூலம் உங்களை நீங்கள் சுறுசுறுப்பாக வைத்திருங்கள். குழப்பமான சிந்தனைகளில் உங்கள் மனதை அலைபாய விடாதீர்கள். உங்களது தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை ஓரமாக வைத்துவிட்டு, இருப்பதை அனுபவியுங்கள். சில குறுகியகால பயணங்கள் வரும்நாட்களில் உங்களுக்காக காத்திருக்கின்றன. தூய்மையான காற்று மற்றும் சூழல் சார்ந்த காட்சிகள் மாறும்போது, நீங்கள் உண்மையிலேயே அவற்றால் பயன்பெறலாம். எனவே, அதிலிருந்து நீங்கள் வெளியேற வேண்டாம்.
கன்னி ராசிபலன்
இன்று உங்கள் மனதில் நிறைய விஷயங்களைச் சிந்தித்து வருகிறீர்கள், ஆனால் அந்த விஷயங்களை விரைவாகச் சிந்திக்க வேண்டாம். உங்களிடம் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் திறமை இன்று உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களைச் சுற்றியுள்ள நல்லெண்ணம் கொண்ட நபர்களால் கவரப்படுவீர்கள். உங்கள் மனதை வலுவாக வைத்திருங்கள், நீங்கள் கேட்கும் அனைத்தையும் நம்ப வேண்டாம். சிக்கலான விஷயங்களை மட்டும் நிராகரிக்க வேண்டாம். ஒரு நேரத்தில் ஒரே ஒரு சிக்கலுக்கு மட்டும் தீர்வு காணுங்கள்.
துலாம் ராசிபலன்
சவால்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். எனவே, அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் சரியான தருணம் இதுவாகும். தைரியமாக இருங்கள். மேலும், தீர்வுகளைக் கண்டறிய முயலுங்கள். இது உங்களுக்கு ஏன் நேர்ந்தது என அங்கலாய்த்துக் கொள்வதில் எந்த பயனும் இல்லை! எனவே, இன்று முதல், சரியான அளவில் உடற்பயிற்சி செய்து, ஆரோக்யமான உணவை உட்கொள்ளுங்கள். அச்சமின்றி இருங்கள். உங்களது முதுகுக்குப் பின்னால், புறம்கூறுபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கவலைப்படாதிருங்கள். விமர்சனங்களை எளிதான மனதுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.
விருச்சிகம் ராசிபலன்
இன்று, உங்களது மனதில் நிறைய விஷயங்கள் நிறைந்துள்ளன. நிறைய விஷயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உங்களது கவனம் உடனடியாக தேவைப்படும் விஷயங்களில், உங்கள் ஆற்றலை மையப்படுத்தத் தெரிவு செய்யுங்கள். இன்று, உங்களது குறும்புத்தனமான செயல்களிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. ஆகவே, இன்று, ஏதாவது ஒன்றை சற்று வேகமாக எடுக்க நீங்கள் ஆசைப்பட்டாலும் கூட, அதை செய்ய வேண்டாம். அனைத்தும் உங்களுக்கு செலவு வைத்துவிடும். அவசரகதியில் வார்த்தைகளை கொட்டித் தீர்ப்பதையும், மனக்கிளர்ச்சியால் எடுக்கும் முடிவுகளையும் தவிருங்கள்.
தனுசு ராசிபலன்
நீங்கள் குறைவாக கவலையடைய விரும்பினால், நீங்கள் இன்னும் அதிகமான காரியங்களைச் செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயங்களை கச்சிதமாக செய்து முடிப்பதற்கு, நீங்கள் மனக்குழப்பம் மற்றும் பயத்தை விட்டொழிக்க வேண்டும். உங்களது வசீகரமும், சமநிலையும் சில புதிய வாய்ப்புகளைப் பெற உதவும். ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்று ஒரு சிறந்த நாளாக அமையும். உங்களது வாழ்க்கையில், மற்றவர்கள் உங்களுக்காக என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து அதை அதிகம் பாராட்ட வேண்டும். மேலும், இன்றைய பொழுது அவற்றைக் செய்து காட்ட ஒரு நல்ல நாளாக அமையும்.
மகரம் ராசிபலன்
நீங்கள் மிகவும் நேசிக்கும் நபருக்கு ஒன்றைச் செய்வதாக உறுதி அளிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், நீங்கள் அதை விரைவாகச் செய்ய முடியுமா என்று நினைக்கிறீர்கள், அதற்கான பதில் உங்களிடமே இருக்கிறது. ஆக்கப்பூர்வமான பணிகளை அட்டவணைப்படுத்திக் கொண்டு வேலை செய்யுங்கள், நீங்கள் ஓய்வாக இருக்கும் நேரத்தைக் குறையுங்கள், இது வேதனை நிறைந்த கடந்த கால நினைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். இன்று நீங்கள் சோர்வாகக் காணப்படுவதற்கு அதிகளவிலான உழைப்பே காரணமாக இருக்கிறது. பணிகளுக்கான தகவல்களைக் கவனமாகத் தெரிந்து கொள்வது, பணிகளைத் தேவையான அளவிற்குச் சிறப்பாகச் செய்வது போன்றவையே நீங்கள் அதிகளவு வேலை செய்ய தூண்டுகிறது.
கும்பம் ராசிபலன்
நீங்கள் எதைச் செய்தாலும் அதில் கவனம் செலுத்துகிறீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்த கற்றுக் கொள்வதுடன், நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அற்பமான விஷயங்களை ஒதுக்கி வைத்து, முக்கியமானவற்றில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம். நீங்கள் சிலர் மீது கடும் கோபத்தில் இருக்கிறீர்கள். உங்கள் பொறுமையைச் சோதிக்கும் நேரம் இதுவாகும். நீங்கள் அமைதியான மனதுடன் சிந்திப்பது நல்லது. உங்களைச் சிக்கலில் ஆழ்த்த விரும்பும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
மீனம் ராசிபலன்
விரக்தியாக இருப்பது உங்களுக்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. நீங்கள் இன்னும் நிறையத் தடைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த தடைகள் உங்களை விட பெரியவை அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொண்டால், சுமூகமாக பணியைச் செய்யலாம். உங்கள் சகா ஊழியர்களுடன் நல்ல முறையில் பேசி பழகத் தயங்க வேண்டாம். இப்படிப் பேசுவதை அவர்களும் பாராட்டுவார்கள். இன்று அமைதியான மனதுடன் விஷயங்களைச் சிந்தியுங்கள்.
0 Comments