தமிழ்நாடு அரசு RCH தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு RCH பணியாளர் நலச் சங்கம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய முனைவர் என்னை செல்வராஜ் மாநில தலைவர் மற்றும் மாவட்டத் தலைவர் மகாலட்சுமி முன்னிலை மாவட்ட துணைத்தலைவர் டெல்லி பாபு மாவட்ட செயலாளர் சோபனா மாவட்ட பொருளாளர் வினோ மற்றும் 50 க்கு மேற்பட்ட சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முக்கிய கோரிக்கையாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீண்ட காலமாக தூய்மை பணியாளர்களாக குறைந்த மாத ஊதியத்தில் பணிபுரிந்து வரும் 60 வயது நிரம்பாத அனைவருக்கும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணி உடனடியாக வழங்கிட வேண்டும் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக அளவில் நோயாளிகள் வருவதால் அதற்கு ஏற்ப கூடுதல் பணியிடங்களை உருவாக்கி அனைவருக்கும் பணி வழங்கிட வேண்டும்.
தமிழக முழுவதும் பணிபுரியும் நோக்கிய மருத்துவமனை பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான உயர்ந்த பட்ச தின கூலி வழங்கிட வேண்டும்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு வார ஓய்வு அரசு விடுமுறை நாட்கள் மருத்துவ விடுப்பு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன கடைசியாக மாவட்டச் செயலாளர் பர்கத் பேகம் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
No comments