தாய்லாந்தில் இருந்து தென்கொரியாவிற்கு பயணிகள் விமானம் ஒன்று 181 பேருடன் பயணித்தது ஆனால் இந்த விமானம் தென்கொரியாவில் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது இதில் முதலில் 85 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இரண்டு பேர் தான் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதம் 179 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஜேஜூ ஏர் நிறுவன சி.இ.ஓ. கிம் இ-பே விபத்தை தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்ததாகவும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அனைத்து பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டதோடு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
0 Comments