ஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பரணி நட்சத்திரத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஐய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐய்யனாரை தரிசித்துச் சென்றனர் அதைத்தொடர்ந்து ஸ்ரீ ஐய்யனாருக்கு அபிஷேகம் செய்த பிரசாதமும், மற்றும் சர்க்கரை பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை ஸ்ரீ ஐய்யனார் கோவில் தர்மகர்த்தா லோகு மற்றும் பெரியபாளையம் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments