• Breaking News

    சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் கைது

     


    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுகவினர் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இவர்கள் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக கூறி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் சீமான் கலந்து கொள்ளாத நிலையில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் முன்னதாக அதிமுகவினர் மற்றும் பாஜகவினரையும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக காவல்துறை கைது செய்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியினரையும் கைது செய்துள்ளனர்.

    No comments