ஹீரோவாக மட்டும் தான் படங்களில் நடிப்பேன் - நடிகர் சூரி


 தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு கொட்டு காளி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த அவர் கருடன் திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்தார். 

இந்த மூன்று படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது விடுதலை 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சூரி விடுதலை 2 படம் பற்றி செய்தியாளர்களை சந்தித்தபோது இனி கதாநாயகனாகவே படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பேன் என்று கூறிய அவர் தனக்கு எப்போதுமே சிவகார்த்திகேயன் தான் ஹீரோ என்று கூறினார். மேலும் நடிகர் சூரி இனி படங்களில் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறியதால் ‌ அவரை இனி காமெடி கதாபாத்திரங்களில் பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments