திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டம் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். திருவண்ணாமலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் உயிரிழந்தனர்.
டிசம்பர் 13-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த நிலையில் டிசம்பர் 13-ஆம் தேதி திருவண்ணாமலை மகா தீபத்திற்கு மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தொடர் மழை மற்றும் மகா தீபத்தை முன்னிட்டு தேசிய பேரிடர் மீட்பு குழு திருவண்ணாமலைக்கு விரைந்தது. அரக்கோணத்தில் இருந்து தீபக் தலைமையில் 30 பேர் கொண்ட குழு திருவண்ணாமலைக்கு விரைந்து செல்கிறது.
0 Comments