பிரேசில் பீச் வாலிபால் போட்டியில் ஏவிசி கல்லூரி மாணவி பங்கேற்பு


மயிலாடுதுறை மாவட்டம் மன்னன்மபந்தல் ஏவிசி கல்லூரியில் எம்.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி எல். கனிமொழி பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக அளவிலான பீச் வாலிபால் போட்டியில் இந்திய பல்கலைக்கழகம் சார்பாக கலந்துகொண்டு முதல் போட்டியில் பிரேசில் அணியையும்,இரண்டாவது போட்டியில் சீனாவையும் வென்று, மூன்றாவது போட்டியில் அமெரிக்க அணியிடம் நூல் அளவில் வெற்றியை தவறவிட்டார். 

மேலும் இவர் ஏற்கனவே தமிழ்நாடு அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் பல்வேறு போட்டிகளில் விளையாடி கோப்பைகளையும் பதக்கங்களையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏழை குடும்பத்தைச் சார்ந்த மாணவி சர்வதேச போட்டியில் பங்கேற்று கல்லூரிக்கும் தனது பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். சர்வதேச போட்டியில் பங்கு பெற்ற மாணவியை ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே. வெங்கட்ராமன், பாராட்டினார்.

Post a Comment

0 Comments