தேனி மாவட்டம் கம்பத்தில் ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கல்வெட்டை தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார். கடந்த 1960 ஆம் ஆண்டு கம்பத்தைச் சேர்ந்த ஆங்கூர் ராவுத்தர் என்பவர் ஊரின் மையப்பகுதியில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் அரசு தரப்பில் பள்ளி கட்டுவதற்கு 86 செண்டு நிலத்தை தானமாக வழங்கினார்.
இதற்காக அவரது பெயரை இணைத்து பள்ளி துவங்கப்பட்ட நாள் முதல் ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்று பள்ளி ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆங்கூர் ராவுத்தர் என்ற பெயர் ஏ ஆர் என்று பெயர் சுருக்கம் செய்யப்பட்டு பள்ளி நிர்வாகம் தரப்பில் பதிவு செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையில் பல்வேறு சமூக நல இயக்கங்கள் இடத்தை தனமாக கொடுத்த ஆங்கூர் ராவுத்தர் பெயர் முழுமையாக இடம் பெற வேண்டும் என்று பல்வேறு இடங்களில் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தேனி எம்பி ஆக தமிழ்ச்செல்வன் பொறுப்பேற்றதும், பல்வேறு இயக்கத்தினர் ஆங்கூர் ராவுத்தர் என்ற பெயரை முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என்று தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் இடம் மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட கல்வி துறை அதிகாரியிடம் ஆவணங்களின் அடிப்படையில் பெயரை பதிவு செய்ய வலியுறுத்தினார். இதனை அடுத்து ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்ற வாசகம் முழுமையாக இடம் பெற்றது.
ஆங்கூர் ராவுத்தர் பெயர் முழுமையாக இடம் பெறுவதற்கு முழு முயற்சி எடுத்த தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
0 Comments