பெட்ரோல், டீசல், கேஸ், ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எப்போது சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறார் அண்ணாமலை...? திமுக போஸ்டர்

 


தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்டார். அதன் பிறகு முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து பிப்ரவரி மாதம் அறுபடை வீடுகளுக்கு செல்ல போவதாக கூறிய அவர் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

அண்ணாமலையின் சாட்டையடியை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் விமர்சிக்கிறார்கள். அந்த வகையில் இதனை விமர்சிக்கும் விதமாக தன் மதுரை உசிலம்பட்டியில் தற்போது திமுக போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளது. அந்த போஸ்டரில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர், ஜிஎஸ்டி வரி உயர்வு போன்ற வளர்ச்சிக்கு  கண்டனம் தெரிவித்து அண்ணாமலை எப்போது சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறார் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்து பேசும் பொருளாக மாறி உள்ளது.

Post a Comment

0 Comments