மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி உயிரிழப்பு

 


மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனரும், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவருமான ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி மாரடைப்பால் உயிரிழந்தான். 2008 ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திலும் இவனுக்கு தொடர்பு உள்ளது.

நீரிழிவு பாதிப்பு காரணமாக லாகூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மக்கிக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. அதில் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இவன் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜமாத் உத் தாவா அமைப்பின் துணைத்தலைவராகவும் இருந்துள்ளான். பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய வழக்கில் இவனுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் பிறகு இவனின் செயல்பாடுகள் முடங்கின.

2010 ல் இவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த அமெரிக்கா, அவனது சொத்துகள் அனைத்தையும் முடக்கியது. அவனுடன் அமெரிக்கர்கள் தொடர்பு கொள்வதையும் தடுத்தது. 2023ம் ஆண்டு இவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த ஐக்கிய நாடுகள் சபை, அவனின் ஆயுதங்களை முடக்கியதுடன், வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்து இருந்தது.

2000 டிச.,22 ல் டில்லி செங்கோட்டையில் நடந்த தாக்குதல்

2008 ஜன.,1 ல் ராம்பூரில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது நடந்த தாக்குதல்,

2008 நவ.,26 மும்பை பயங்கரவாத தாக்குதல்,

2019 பிப்.,12 -13 ல் சிஆர்பிஎப் முகாம் மீது நடந்த தாக்குதல்

2018 மே 30 ல் பாரமுல்லாவில் நடந்த தாக்குதல்

2018 ஆக., 7 ல் பந்திப்போராவில் நடந்த தாக்குதல் சம்பவங்களிலும் தொடர்பு உள்ளது. 2006 மே 7 ல் ஐதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை இவன் கண்காணித்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments