கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் சென்று ஐயப்பனை வழிபடுவார்கள். இந்த நிலையில் தர்ம சாஸ்தா ஐயப்பனின் தங்க ஆபரணங்கள் தமிழ்நாடு வழியாக அச்சம் கோவில் கொண்டு செல்லப்பட்டது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் மண்டல மகா உற்சவ திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறும். இதனால் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக தங்கத்தால் ஆன அங்கீகிகள், ஆபரணங்கள் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து எடுத்து வரப்பட்டது.
அந்த ஆபரணங்கள் இரண்டு மாநில போலீசார் பாதுகாப்புடன் தமிழகம் வழியாக அச்சன்கோவிலுக்கு கொண்டுவரப்படும். இந்த நிலையில் ஐயப்பனுடைய தங்க ஆபரணங்களுக்கு செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு காசி விஸ்வநாதர் ஆலயத்தின் முன்பு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பொதுமக்கள் தரிசனத்திற்காக தங்க ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ளது.
0 Comments