ஆதவ் அர்ஜுனாவிடம் ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருக்கிறது - திருமாவளவன்


 

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்டார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். ஆதவ் அர்ஜுனா நிகழ்ச்சியில் திமுகவுக்கு எதிராக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டது வெறும் கண் துடைப்புக்காக அல்ல. அவர் தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பது போல தெரிகிறது என கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments