மக்களை கொன்று குவிப்பதை தமிழக அரசு போற்றுகிறதா..... மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி

 


கோவை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:

மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோசுக்கு அடுத்து மிகப்பெரியதாக மதிக்க கூடிய தலைவர் அம்பேத்கர். அவரது புகழ் என்றென்றும் இந்த மண்ணில் நிலைத்திருக்கும்.

மாநில உரிமை பறிபோகிறது என, மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே, சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறார்கள். அதன் ஒரு பகுதி தான் இது.

அடிக்கடி தேர்தல் நடத்துவது சமுதாயத்தின், மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு கேடு விளைவிக்கும். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வருவது தான், முன்னேற்றத்துக்கான வழியாக இருக்க முடியும்.கருணாநிதி அன்று நடவடிக்கை எடுக்க தவறியதால் தான், கோவை குண்டு வெடிப்பில் 58 பேர் உயிரிழக்க நேரிட்டது. அதற்கு காரணமானவரை, ஏதோ ஒரு தியாகியை போன்று ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு, மாநில அரசு அனுமதிக்கிறது என்றால், சாதாரண மக்களை கொன்று குவிப்பதை தமிழக அரசு போற்றுகிறதா, பாராட்டுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

அதில் இரண்டு அரசியல் தலைவர்கள் கூட, ஏதோ ஒரு பெரிய தியாகிக்கு மரியாதை தருவதை போன்று கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை முற்றிலுமாக தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

சாதாரண குழந்தையை கூட, வெடிகுண்டால் கொன்று குவித்த ஒருவர் தியாகியா? ஒரு மதத்தை சார்ந்தவர் என்பதற்காக போற்ற முடியுமா, இறப்பை கொண்டாட முடியுமா. இதெல்லாம் மாபெரும் தவறு.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments