சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக கூறி காவல்துறையினர் அவர்களை கைது செய்ததோடு வழக்கும் பாய்ந்தது.
இதைத் தொடர்ந்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சீமான் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் முன்னதாக நாம் தமிழர் கட்சியினர் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இதைத் தொடர்ந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சீமான் போராட்டத்தில் ஈடுபட்டார். தற்போது அவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
0 Comments