படம் தோல்வி..... சம்பள பாக்கியை வாங்க மறுத்த நடிகை சாய் பல்லவி

 


பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இதில் இவர் நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே இவருக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.

தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி, முன்பு தான் நடித்த படம் ஒன்று தோல்வியடைந்ததால் சம்பள பாக்கியை வாங்க மறுத்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம், கடந்த 2018-ம் ஆண்டு ஹனு ராகவபுடி இயக்கத்தில் வெளியான பாடி பாடி லெச்சே மனசு படம் வெறும் ரூ. 8 கோடி மட்டுமே வசூலித்து தோல்வியடைந்தது. இதனால், படத்தில் கையெழுத்திடும்போது வாங்கிய தொகையை தவிர பாக்கி பணத்தை சாய் பல்லவி வாங்க மறுத்திருக்கிறார். அவ்வாறு அவர் தியாகம் செய்த பணம் ரூ. 40 லட்சத்தை நெருங்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில், சிவகார்த்திகேயனுடன் 'அமரன்' திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற சாய்பல்லவி, தற்போது நாக சைதன்யாவுடன் 'தண்டேல்' படத்திலும், பாலிவுட்டில் 'ராமாயணம்' படத்திலும் நடித்து வருகிறார்.

Post a Comment

0 Comments