எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், விசிக ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா திமுகவை கடுமையாக விமர்சித்தார். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் கண்டனம் தெரிவித்தார். மேலும் விஜயை கூத்தாடி என கூறினார். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் மோகன்ஜி கூத்தாடி… எவ்வளவு திமிர் இவருக்கு.. இவரது தலைவரே ஒரு படத்தில் கூத்தாடி வேடம் போட்டவர் தான். இந்த வார்த்தைக்கு ஷா நவாஸ் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இது திரை நடிகர்களை மட்டுமில்லை. நம் கிராமத்து கூத்து கலைஞர்களையும் இழிவுபடுத்தும் வார்த்தை என கூறியுள்ளார்.
0 Comments