• Breaking News

    நடிகை சித்ராவின் தந்தை தற்கொலைக்கு காரணம் என்ன...? மனைவி கண்ணீர் பேட்டி

     


    பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா. இவரது தந்தை காமராஜ் காவல் உதவி ஆய்வாளராக இருந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். இன்று காலை திருவான்மியூரில் இருக்கும் ராஜாஜி நகர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு பூந்தமல்லி அருகே உள்ள ஹோட்டலில் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் எனக் கூறப்பட்டது.

    போலீசார் அவரை கைது செய்த நிலையில் 2021 ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் தேதி ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கினை விசாரித்த திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றம் ஹேம்நாத் நிரபராதி என கூறி அவரை வழக்கிலிருந்து விடுவித்தது. அந்த எதிர்ப்பை எதிர்த்து காமராஜ் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் காமராஜ் தற்கொலை குறித்து அவரது மனைவி கூறும் போது, சித்ரா வழக்கு தீர்ப்பு வந்ததிலிருந்து எனது கணவர் மன உளைச்சலில் இருந்தார். சாப்பிடவே மாட்டார். சாப்பிடாமல் இருந்து இப்படி செய்து விட்டார். என் வீட்டை சுடுகாடாக்கி விட்டார்கள். மன உளைச்சலில் நாங்கள் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறோம். தீர்ப்பை மிகவும் எதிர்பார்த்து இருந்தோம் என கண்ணீருடன் கூறியுள்ளார்.

    No comments