ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் மோசடி..... கேரள வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்

 


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கேடிசி நகரில் வசிக்கும் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற செய்தி வந்தது. அவர்கள் கூறியபடி முதலீடு செய்த அந்த நபருக்கு 4.4 லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்தது. அதன் பிறகு இன்னும் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறியதால் மர்ம நபரின் அறிவுரைப்படி அந்த நபர் FHT என்ற செயலியை பதிவிறக்கம் செய்து 52.11 லட்ச ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் அவருக்கு லாபம் எதுவும் வரவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நபர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அஜ்மல் என்பவர் பணமோசடியில் ஈடுபட்டது உறுதியானது. அவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். ஆன்லைன் முதலீடு ஷேர் மார்க்கெட் ட்ரேடிங், பகுதி நேர வேலை ஆகியவற்றின் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் போலியான விளம்பரங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Post a Comment

0 Comments