கோபியில் அறிவுசார் மையத்தில் அமைக்கப்பட்ட இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்
ஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில் தினசரி மார்க்கெட் பகுதியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவு சார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டது. இங்கு ஒன்றிய, மாநில அரசு போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் மாணவ, மாணவிகள் இணைய வழிகற்றல்.ஸ்மார்ட் கிளாஸ் என பெருநகரத்தில் உள்ள அனைத்து வசதிகளுடன் உருவாக்கப்பட்டது.
இந்த அறிவுசார் மையத்தில் கோபி மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவ , மாணவிகள் வருகின்றனர். இவர்கள் வரும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய வசதி இல்லாத நிலையில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வாகன நிறுத்தம் . அமைத்து தரப்பட்டது .இந்த இரு சக்கர வாகன நிறுத்தம் திறப்பு விழா ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலை மையில் ஈரோடு வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ. பெருமாள் சாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந் திரன், மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, கோபிசெட்டிபாளையம் திமுக நகர செயலாளரும் , கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்து சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாகன நிறுத்தும் இடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் டி.வி.சுபாஷினி , தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிறுவலூர் வெள்ளியங்கிரி, கீதா முரளி , கோபிசெட்டிபாளையம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் சிறுவலூர் முருகன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் குள்ளம்பாளையம் கே.கே. செல்வன், ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவேங்கடம், மாவட்ட பிரதிநிதி வெள்ளாளபாளையம் சீனிவாசன், வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் சரண்யா அன்பரசு, கோபி தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் டாக்டர். கதிர்வேல், நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளரும் , நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் ப.செந்தில்குமார் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments