அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அதன் பின் அவர் தனது அரசு ஆட்சியில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி தொழிலதிபர்களான எலான் மஸ்க் உள்ளிட்ட பலருக்கும் அரசின் முக்கிய பொறுப்புகளை கொடுத்துள்ளார். அதேபோன்று விவேக் ராமசாமி உள்ளிட்ட இந்திய வம்சாவளியினருக்கும் டிரம்ப் அரசு நிர்வாகத்தில் இடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் AI தொடர்பான அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசராக, சென்னை சேர்ந்த ஸ்ரீ ராம் கிருஷ்ணனை என்பவரை டிரம்ப் நியமித்துள்ளார்.
இவர் மைக்ரோசாப்ட், டிவிட்டர், யாகூ, பேஸ்புக் போன்ற நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இவர் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். அதோடு பிரபல தொழிலதிபரான டேவிட் கேக்சுடன் பணியாற்றியுள்ளார். இவர் AI-க்கான அமெரிக்க தலைமை பொறுப்பை கண்காணிக்க இருக்கிறார். இவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதியின் ஆலோசனை குழுவிலும் இடம்பெற்றுள்ளார். இந்தியா அமெரிக்கரான ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments