தமிழகத்தில் நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகம் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு திண்டுக்கல், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், சேலம், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
0 Comments