கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் ஊராட்சி சந்தப்பேட்டையில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தின் மண்டல பூஜை சிறப்பு பூஜைகளுடன் நிறைவு பெற்றது.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் ஊராட்சி சந்தப்பேட்டை கிராமத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில் கடந்த அக்டோபர்-21ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் மகா கும்பாபிஷேகம் நிறைவு பெற்ற நிலையில், 40நாள் மண்டல பூஜை துவங்கியது. தொடர்ந்து மண்டல பூஜை நிறைவு விழா டிசம்பர்-8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மண்டல பூஜை நிறைவை ஒட்டி மாநெல்லூர் பிரதான ஆச்சார்யர் சிவஸ்ரீ எஸ்.கைலா குருக்கள், திருப்பாச்சூர் சிவஸ்ரீ எஸ்.ரமேஷ் குருக்கள், சிவஸ்ரீ எஸ்.கார்த்திகேய குருக்கள் சிறப்பு பூஜையை நடத்தினர். தொடர்ந்து ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த மண்டல அபிஷேகத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், திரைப்பட நடிகர் சம்பத்ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த 40நாள் மண்டல அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழா குழுவை சேர்ந்த அசோக்குமார், யுவராஜ் முரளி, ஜெகன் உள்ளிட்டோர் முன்னின் று சிறப்பாக நடத்தினர்.
இந்த மண்டல அபிஷேகத்தில் கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ சுந்தர விநாயகர் அருளை பெற்றனர்.
0 Comments