திருவள்ளுர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கிராம கமிட்டி மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் அஜித் பவருக்கு ஒன்றிய பாஜக அரசு கடிகார சின்னம் கொடுத்து வெற்றி பெற வைத்தும் துணை முதல்வர் பதவி கொடுத்தும் அவருக்கு பரிசாக ஊழல் வழக்கில் முடக்கி வைத்திருந்த 1000 கோடி சொத்துக்களை விடுவித்துள்ளதாகவும்.
இதன் மூலம் பணத்தாலும் அதிகாரத்தாலும் அரசியல் கட்சிகளை பிஜேபி விலைக்கு வாங்குவதாகவும்,விஜய் பாஜகவை எதிர்த்தால் அவருக்கு சில பல விஷயங்கள் ரெய்டு நடக்கும் என மறைமுகமாக விமர்சித்துள்ளார்.விஜய் நேராக வர வேண்டுமென்றால் களத்தில் இறங்கி என்ன பண்றார் என்று பார்க்க வேண்டும் என்றார்.தமிழகத்தில் இருக்கும் திமுக கூட்டணி பாஜகவை மும்முரமாக எதிர்க்கக்கூடிய கூட்டணி என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments