நம்பியூர் ஒன்றிய பகுதியில் மாவட்ட மாணவர் அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு எழுது உபகரணங்கள் வழங்கும் விழா


ஈரோடு மாவட்டம், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் திமுக இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கான எழுது உபகரணங்கள் வழங்கும் விழா எருமைக்காரன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில் சத்தியமங்கலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளரும் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ ,  நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளரும் நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல்.ப.செந்தில்குமார் , ஈரோடு வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முனைவர் டி.கே.கிருபாகரன் ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு எழுது உபகரணங்கள் வழங்கினார்.உடன் திமுக நிர்வாகிகள், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள்  எஸ்.வினோத்குமார், எஸ்.சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியானது மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கே.சூரியா   ஏற்பாடு செய்தார்.

 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments