இந்தியா-ரஷ்யா நட்புறவு உலகின் மிக உயரமான மலையை விட உயர்ந்தது..... புதினை சந்தித்த ராஜ்நாத் சிங் பெருமிதம்

 


ரஷ்யா சென்றுள்ள, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேசினார். பின்னர் பேசிய அவர், இந்தியா-ரஷ்யா நட்புறவு, உலகின் மிக உயர்ந்த மலையை விட உயரமானது; உலகின் மிக ஆழமான கடலைக் காட்டிலும் ஆழமானது என்றார்.அரசு முறை பயணமாக, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றுள்ளார். அவர், இந்தியா-ரஷ்யா ராணுவ ஒத்துழைப்புக்கான குழுவின் மாநாட்டில் பங்கேற்றார். மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து பேசினார். இருநாட்டு தலைவர்களும் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.

ரஷ்யா-இந்தியாவுக்கு இடையிலான உறவு மகத்தான ஆற்றலை கொண்டுள்ளது' என இருநாட்டு தலைவர்களும் தெரிவித்தனர். அப்போது, ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இந்தியா-ரஷ்யா நட்புறவு உலகின் மிக உயரமான மலையை விட உயர்ந்தது. உலகின் மிக ஆழமான கடலை விட ஆழமானது. இந்தியா தனது ரஷ்யா நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். எதிர்காலத்திலும் அதை தொடருவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Post a Comment

0 Comments