ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா


  தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தி லிட்டில் பிளவர் பள்ளியில் கிறிஸ்துமஸ் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஆசிரியர் கஸ்தூரி அவர்கள் தலைமை தாங்கி கலந்து கொண்டு, விழா சிறப்புரையாற்றினார்.

பள்ளியின் தாளாளர் ஹென்றிஅருளானந்தம் மற்றும் நிர்வாகி தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் செயலாளர் மாத்யூ ஜோயல் வாழ்த்துரை வழங்கினார் .பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி கிறிஸ்துமஸ் நிகழ்வு குறித்து சிறப்புரையாற்றினார்.

 விழாவில் மாணவ மாணவிகளின் பல்வேறு கழநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் கேக் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பூமா ,கவிதா ,ராகினி, பாண்டிச்செல்வி, திவ்யா உள்பட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments